Oதங்கம் விலை இன்னும் குறையுமா?

Published On:

| By Balaji

சென்னையில் நேற்று (பிப்ரவரி 2) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 36, 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்னும் குறையுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தங்கம் விலையில் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை பவுன் 37,000 ரூபாயைத் தாண்டியே காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி மீதான சுங்கவரி குறைக்கப்பட்டது. தங்கம் இறக்குமதிக்கு ஏற்கனவே 125 சதவிகிதம் சுங்கவரி இருந்தது. அது தற்போது 10 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. சுங்கவரி குறைப்பு காரணமாகவும் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக் கு 480 ரூபாய் குறைந்து 36, 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைச்சரிவானது ஒருவகையில் நகைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. இனி விலை ஏறும்முன் வாங்கிவிடலாம் எனச் சிலர் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். இன்னும் சிலர், விலை இன்னும் குறையும். அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருக்கின்றனர்.

ஆனால், “உலகச் சந்தைகள் மற்றும் இந்திய பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தில் வர்த்தகம் நடைபெறுவது, கோவிட் 19-க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் 90% வெற்றி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை, ஆகஸ்ட் மாதத்திலிருந்து இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

என்றாலும், பங்குச் சந்தைகள் உலகளவில் மீண்டும் இறக்கம் காணலாம்; அதேபோல, கொரோனா இரண்டாவது அலை வீசி, உலகப் பொருளாதார நிலையை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கலாம் என்பதால், தங்கத்தின் விலை மீண்டும் உயர வாய்ப்புண்டு” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share