நிதித் துறை நிலைக்குழுவில் மன்மோகன் சிங்? நிர்மலாவுக்கு நெருக்கடி!

Published On:

| By Balaji

பாஜக கட்சியின் திக்விஜய் சிங்குக்கு பதிலாக நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கை வெங்கய்ய நாயுடு நியமித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய் நகர மேம்பாடு நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனால், அவருக்குரிய இடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதிக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார் என மாநிலங்களவை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமருக்கு வழி வகுக்க நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து திக்விஜய் சிங் ராஜினாமா செய்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை நாட்டின் நிதியமைச்சராக பணியாற்றினார் மன்மோகன் சிங். இந்த ஆண்டு ஜூன் மாதம் மேலவையில் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பு, செப்டம்பர் 2014 முதல் 2019 மே வரை குழுவில் உறுப்பினராக இருந்தார். ஆகஸ்ட் மாதம், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கு முன் நிதித்துறைக்கான நிலைக்குழுவில் மன்மோகன் சிங் இருந்தபோது, பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட விவகாரங்களில் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலம் தான் இந்திய பொதுத்துறை வங்கிகளின் மோசமான காலம் என்று மத்திய நிதியமைச்சர் கடந்த அக்டோபர் மாதம் நிர்மலா சீதாராமன் விமர்சித்திருந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “இந்திய பொருளாதாரத்தை மிகச்சிறந்த பார்வையுடன் எடுத்துச் சென்றவர் பிரதமர் மன்மோகன் சிங். இதனை ரகுராம் ராஜனும் ஒப்புக் கொள்வார் என நினைக்கிறேன். ஆனால் பொருளாதார அறிவு நிரம்ப பெற்றவதாக அறியப்பட்ட மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது தான், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது தான் மிக மோசமான அளவில் வங்கி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன” என கடுமையாக தாக்கியிருந்தார்.

அதே வேளையில், இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை குறித்து மன்மோகன் சிங் மத்திய அரசையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share