&
இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும். இஞ்சி துவையல், கஷாயம் செய்து சாப்பிட்டிருப்பீங்க. மழைக்காலம் தொடர்கிற நிலையில் இந்த இஞ்சி சூப் செய்து சாப்பிட்டு, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.
**எப்படிச் செய்வது?**
ஒரு பெரிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி வைக்கவும். இரண்டு காய்ந்த மிளகாயை சுட்டு வைக்கவும். சின்ன உரலில் இஞ்சி, இரண்டு பச்சை மிளகாய், நான்கு பூண்டு பற்கள், சுட்ட காய்ந்த மிளகாய், ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு, ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம், ஐந்து சின்ன வெங்காயம், ஒரு தக்காளி சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கலவை சேர்த்து வதக்கவும். இந்த கலவை சற்று வதங்கியதும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
**சிறப்பு**
குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
�,