8
சிவகங்கையில் நேற்று ஆயுதப் படைக் காவலர் யோகேஸ்வரன் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் செஞ்சியிலும் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நடு நெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன்(26). செஞ்சி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த இவர், நேற்றைய தினம் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பணி முடிந்ததும், அத்தியூர் காட்டுப்பகுதிக்குச் சென்ற அவர் நேற்று (மார்ச் 2) இரவு தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் சரவணனின் உடலை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காட்டுப்பகுதிக்குச் சென்று சரவணன் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
**கவிபிரியா**�,