Gஇணையத்தை வென்ற தந்தை மகள்!

public

முகநூல், ட்விட்டர், டிக் டாக் என சமூக வலைதளங்களில், பெரும்பாலானோர் தங்களது திறமைகளை வெளிபடுத்தி கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வெளியிடப்படும் சில வீடியோக்கள் பார்ப்பவர்களை வெகுவாக கவரும். அதனை ரிப்பிட் மோடில் வைத்து பார்ப்பார்கள். தங்களால் முயன்ற அளவுக்கு அதனை மற்றவர்களுக்கும் பரப்புவார்கள்.

அந்தவகையில் முகநூலில் பதிவிடப்பட்ட தந்தை மகளின் வீடியோ அனைவரையும் ரசிக்க வைக்கிறது. தி லைன் கிங் படத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த தி டோக்கன் இசைக் குழு பாடிய The Lion sleeps Tonight பாடலை இருவரும் அந்த வீடியோவில் அவ்வளவு கியூட்டாக பாடியுள்ளனர். அந்த பாடலில் வரும் Wimoweh உட்பட, கேட்சி டியூன் என அவர்கள் பாடுவது பார்ப்பவர்களைக் கவனம் ஈர்க்கச் செய்கிறது.

அக்குழந்தையின் தந்தையான திரிபுரா தர்ம நகரைச் சேர்ந்த துருபஜோதி தேப்நாத், கூறுகையில் ”தனது மகள் அனுக்ரிதிக்கு(7), 5 வயதாக இருக்கும்போது அவள் ஆங்கில பாடல்களிலும் டிஸ்னி திரைப்படங்களிலும் அதிக ஆர்வம் காட்டியது தெரியவந்தது.

”ஃபோரஷன்” படத்தின் “லெட் இட் கோ”பாடலை அவர் பாடிய வீடியோ ஒன்றுக்கு நேர்மறையான பதில்கள் கிடைத்தன. அது அவளது திறமையை அடுத்த லெலவலுக்கு எடுத்துச் செல்ல தூண்டியது. கடந்த ஜனவரி முதல் யூட்யூப் சேனலைத் தொடங்கினோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பாசிடிவ் கருத்துகள் வந்துள்ளன. 12ஆயிரத்துக்கு அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *