நாடு முழுவதும், இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழையானது வழக்கத்தைவிட அதிகமாகப் பெய்துள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை மையம். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், மூன்றே நாட்களில் 95 சதவிகிதம் மழை பெய்துள்ளதாகக் கூறியுள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம் புள்ளிவிவர அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், 22 நகரங்களில் கணக்கிடப்பட்ட மழை அளவின் அடிப்படையில், சராசரியாக 27 நாட்களில் பெய்ய வேண்டி மழையானது மூன்று நாட்களில் பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழையானது, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்களில் பெய்யும். இந்த மழையின் அளவுக்கு ஈடாக, நாடு முழுவதும் சில வாரங்களில் மழை பொழிந்துள்ளது. டெல்லியில் 99 மணி நேரத்தில் 95 சதவிகிதம் மழையும், மும்பையில் ஐந்தரை நாட்களில் (134 மணிநேரம்) 50 சதவிகித மழையும் பெய்துள்ளது. அகமதாபாத்தில் 46 மணி நேரத்தில் 66.3 செ.மீ. மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,