Gயூரியா இறக்குமதி 36 % குறைவு!

public

இந்தியாவில் உர உற்பத்தி அதிகரிப்பாலும் உர மானியங்கள் குறைப்பாலும் யூரியாவின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் 36 சதவிகிதம் குறைந்துள்ளது என வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஜனவரி காலகட்டத்தில் 51.65 லட்சம் டன் அளவிலான யூரியா மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. யூரியா இறக்குமதி குறைந்ததற்கான காரணம், உள்நாட்டில் உற்பத்தி அதிகமானதும், இயற்கை முறையிலான வேம்பு கலந்த யூரியாவை விவசாயிகள் பயன்படுத்த ஆரம்பித்ததுமே ஆகும். உள்நாட்டில் யூரியா உற்பத்தி கடந்த வருடத்தில் 20 லட்சம் டன் அதிகரித்து 245 லட்சம் டன்னாக இருந்தது. மேலும், இந்தியாவில் ஒரு வருடத்திற்கான யூரியாவின் தேவை 300 லட்சம் டன்னாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் ஒரு டன் யூரியாவின் விலை ரூ.5,360 ஆக உள்ளது. இதில் உற்பத்தி செலவு மற்றும் விற்பனை விலை இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு உற்பத்தியாளர்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *