gவெந்தயக் கீரையின் மருத்துவப் பயன்கள்!

Published On:

| By Balaji

வெந்தயக் கீரையின் மருத்துவப் பயன்களை விளக்குகிறார் அரசு சித்த மருத்துவர் ச.செந்தில்குமார்.

வெந்தயக் கீரை தமிழில் வெந்தயம், மேதி, வெந்தை என்று அழைக்கப்படுகிறது. இதன் சுவை கைப்பு (கார்ப்பு). வெந்தயக் கீரையின் தன்மை குளிர்ச்சி உடையதாக இருக்கும். இதன் பிரிவு கார்ப்பு ஆகும். மேலும் வெந்தயத்தில் குளிர்ச்சி, சிறுநீர் பெருக்கி, துவர்ப்பு, வறட்சி அகற்றி போன்ற பண்புகள் உள்ளன. வெந்தயம் = வெந்த + அயம். அதாவது அயம் என்றால் இரும்பு சத்து ஆகும்.

வெந்தயத் தண்டு சாப்பிடுவதால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தும் தீரும். வெந்தயத்தின் விதை ரத்த அழுத்தம், நீர் வேட்கை, சீத கழிச்சல் போன்ற பிரச்னைகளை நீக்கும்.

வெந்தயக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் உண்டால் விரைவில் குணமாகும். கண்ணுக்கு இந்தக் கீரை நல்லது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும்.

பேதி அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் தீர வெந்தய இலைகள் சாப்பிட்டால் குணமடையும். செரிமானப் பிரச்னைகள் மற்றும் இரைப்பைப் பிரச்னைகளும் தீரும்.

வெந்தயக் கீரை நீரிழிவு சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன் ப்ராப்பர்ட்டி வயது முதிர்ச்சியைத் தடுக்கிறது.

மேலும் நீரிழிவு நோயால் சிறுநீரகத்தில் உள்ள சர்க்கரையை 54% குறைக்கிறது. விதைகள் மற்றும் வெந்தயம் இலைகள் பல சுகாதாரப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும்.

வெந்தயம் மற்றும் கருணைக்கிழங்கு சேர்த்து சாப்பிட்டால் ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடை அதிகரிக்கும். கோழிமுட்டை, தேங்காய்ப்பால், நெய் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் இடுப்பு வலி நீங்கும்.

வெந்தய இலையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கம் நீங்கும். வெந்தயத்தை லேகியமாக செய்து சாப்பிட்டால் கல்லீரல், மண்ணீரல் வீக்கம் நீங்கும். பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயக் கீரை சாப்பிடுவதால் பால் உற்பத்தி அதிகரிக்கும். கர்ப்பமாக அல்லது பாலூட்டும் பெண் வழக்கமான உணவில் இந்த வெந்தய இலைகளைச் சேர்க்க வேண்டும்.

மாதவிடாய் பிடிப்புகள் மற்றும் தொடர்புடைய பிரச்னைகள் வெந்தய இலைகள் மற்றும் விதைகள் சாப்பிடுவதால் குறைகிறது. வெந்தயத்தில் இரு ஹார்மோன்கள் உள்ளன. அவை டையோஜெனின் மற்றும் எஸ்ட்ரோஜன். இதில் டையோஜெனின் பெருங்குடலில் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

45 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மாதவிடாய் நின்ற பிறகு அவர்களின் உடலில் ஏற்படும் சோர்வு மற்றும் உடல்வலி போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும். மேலும் மனதுக்கும் உடலுக்கும் சக்தியைத் தரும்.

வெந்தயம் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கேஸ்டிரிக் அல்சர் மற்றும் பைல்ஸ் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. மேலும் மூல பிரச்னைகளையும் தீர்த்துவைக்கும்.

அரசு சித்த மருத்துவர், ச.செந்தில்குமார்

வெந்தய விதையில் இயற்கையாக கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இதனால் இருதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் இருக்கும்.

வெந்தயம் இலைகள் நீரிழிவவை கட்டுப்படுத்தும். இதனால் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதல் விகிதத்தை குறைக்கிறது. இதன் இலைகளில் உள்ள அமினோ அமிலம் தற்போது உடலில் இன்சுலின் உற்பத்தியை தூண்டுகிறது.

வெந்தய இலை முக அழகுக்குப் பயன்படுகிறது. அதாவது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் சுருக்கங்கள் இருந்தால், 15 நிமிடங்கள் இந்தச் சாற்றை தடவி மற்றும் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும். பருக்கள் நீங்கும்.

புதிய வெந்தயம் இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து உச்சந்தலையில் அதை தடவி அரைமணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நீண்ட மற்றும் பளபளப்பாக முடி இருக்கும் மற்றும் தலை முடி உதிரும் பிரச்னை குறையும்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel