அஜித் நடிப்பில் உருவாகிவரும் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுவருகிறது.
அண்ணன், தம்பி பாசத்தைவைத்து வீரம், அண்ணன், தங்கை பாசத்தைவைத்து வேதாளம், நண்பனின் துரோகத்தைக் கூறும் விவேகம் என அஜித் – சிவா காம்போவில் இதுவரை மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. மூன்றுமே கலவையான விமர்சனங்களையே பெற்றன.
இதையடுத்து அதே கூட்டணி மீண்டும் விஸ்வாசம் எனும் பெயரில் புதிய படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப்படம் விஜய்யின் சர்கார் படத்துடன் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அதிலிருந்து பின்வாங்கி பொங்கலுக்கு இதை வெளியிட உள்ளனர். இதன் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்தியன்றி வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டிருந்தது.
வீரத்தில் விநாயகம், வேதாளத்தில் கணேஷ் என கதாநாயகனுக்கு பெயர்வைத்த சிவாவுக்கு விநாயகர் சென்டிமென்டும் இருக்கலாம் எனக் கருதப்பட்டதால் ஃபர்ஸ்ட் லுக் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவே அதிகமான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்பட ஃபர்ஸ்ட் லுக் இன்று (ஆகஸ்ட் 23) அதிகாலை 3.40 மணிக்கு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதில் அஜித் இரண்டு விதத் தோற்றங்களில் உள்ளார். வெள்ளை உடையில் இருக்கும் அஜித் வீரம் பட லுக்கையும் சிவப்பு உடையில் இருக்கும் அஜித் வேதாளம் பட லுக்கையும் பிரதிபலிக்கும் விதமாக இருக்கிறது. அஜித்துக்கு இதில் இரட்டை வேடமா அல்லது இரண்டுவிதத் தோற்றமா எனத் தெரியவில்லை. இணையத்தில் வலம்வருகிற இந்த [போஸ்டர்](https://twitter.com/SathyaJyothi_/status/1032389491405672449) தற்போது டாக் ஆப் தி டவுனாக இருக்கிறது.�,