gவிவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகள்!

Published On:

| By Balaji

S

விவசாய வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் விவசாயத் துறையில் தொழில் தொடங்க நிறைய வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

”விவசாய உற்பத்தியை அதிகப்படுத்திடவும், வேளாண்மையில் உருவாகும் கழிவுகளைக் குறைப்பதற்கும் சில புதுமையான திட்டங்களை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும் மண் வளத்தைப் பலப்படுத்தும் வகையில் செயற்கை உரங்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்கான திட்டங்களையும் மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது” என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரான சுரேஷ் பிரபு *எகனாமிக் டைம்ஸ்* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவது விவசாயத் துறைக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பதாகவும், இந்தச் சவாலை எதிர்கொள்ள முன்னேற்றத் திட்டங்களை நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, மூலதன ஆதாயத்தில் வரி விலக்கு போன்ற சலுகைகள் 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share