தினப் பெட்டகம் (22.08.2018)
ஸ்ட்ராபெர்ரி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்:
1. ஒவ்வொரு ஆண்டும் வசந்த காலத்தில் முதலில் பழுக்கக் கூடியபழம் ஸ்ட்ராபெர்ரி.
2. ஒரு ஸ்ட்ராபெர்ரியில் குறைந்தது 200 விதைகள் இருக்கும்.
3. பண்டைய ரோமானியர்கள் ஸ்ட்ராபெர்ரிக்கு மருத்துவ குணம் இருந்ததாக நம்பினார்கள்.
4. பெல்ஜியம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரிகளுக்கென ஒரு அருங்காட்சியகம் இருக்கிறதாம்!
5. ஸ்ட்ராபெர்ரியில் மட்டும்தான் பழத்திற்கு வெளியே விதைகள் நிரம்பியிருக்கின்றன.
6. ஸ்ட்ராபெர்ரி ரோஸ் குடும்பத்தைச் சேரும்.
7. ஸ்ட்ராபெர்ரி காய்களை ஊறுகாய் போட்டால் மிகவும் ருசியாக இருக்குமாம்!
8. ஸ்ட்ராபெர்ரியின் தாவரவியல் பெயர்: Fragaria Ananassa
9. மற்ற பழங்களைப் போல ஸ்ட்ராபெர்ரிக்கள் பறித்ததற்குப் பிறகு பழுப்பது கிடையாது.
10. ஸ்ட்ராபெர்ரிகள் மஞ்சள், நீலம், வெள்ளை, கருப்பு, பர்ப்பிள் ஆகிய நிறங்களிலும் கிடைக்கும்.
**- ஆஸிஃபா**�,”