gமோடியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

Published On:

| By Balaji

நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த 5 ஆண்டுகளில் முதல் செய்தியாளர் சந்திப்பை இன்று (மே 17) நடத்தினார்.

மே 19ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்றோடு நிறைவடைந்தன. கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பை நடத்தாத பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரச்சாரங்கள் முடிந்தபிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் உடன் இருந்தனர். முதலில் அமித்ஷா பேசுகையில், “ஜனசங்கம் காலத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி ஒரு அமைப்பாக செயல்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டில் பாஜக ஒரு மிகப்பெரிய வரலாற்று வெற்றியை பெற்றது.

மீண்டும் பெரும்பான்மையுடன் இம்முறையும் ஆட்சிக்கு வருவோம். நாங்கள் ஜனவரி 16ஆம் தேதியே பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம். கடந்த முறை வெற்றி பெறாத 120 தொகுதிகளில் இம்முறை வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது” என்றார். அதைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளில் பாஜக செயல்படுத்திய திட்டங்களையும், தேர்தலில் பாஜக தொண்டர்கள் ஆற்றிய பணியையும் அமித்ஷா பட்டியலிட்டார்.

மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு செய்தியாளர்களை சந்திக்க கூட அஞ்சுகிறார் என்று கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வந்த நிலையில், ஆட்சிக்காலம் முடியும் தருவாயில் இன்று பிரதமராக தனது முதல் செய்தியாளர் சந்திப்பை மோடி எதிர்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “உலகம் முழுவதும் நம் செல்வாக்கு இருக்க வேண்டும். திறனுடைய அரசாங்கமாக இருந்தால்தான் தேர்தலையும், ஐபிஎல் போட்டிகளையும் ஒரே நேரத்தில் நடத்த இயலும்.

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிமையத்த அரசுகள், மீண்டும் அரிதாகத்தான் ஆட்சியமைத்திருக்கின்றன. 2019ஆம் ஆண்டில் நாங்கள் மீண்டும் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சிக்கு வர வேண்டியத் தேவை இருக்கிறது. ஊடகங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் மோடியிடம் கேள்வியெழுப்பினர். ஆனால் அவர் பதில் அளிக்காமல், தலைவர்தான் எங்களுக்கு எல்லாம் என்றுகூறி அமித்ஷாவை பதிலளிக்கச் செய்தார். அப்போது பேசிய அமித்ஷா, ”80 பாஜக உறுப்பினர்கள் மேற்கு வங்கத்தில் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் ஏன் தேர்தலில் வன்முறைகள் நடக்கின்றன? நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என போபால் தொகுதி வேட்பாளர் சாத்வி பிரக்யா தாகூர் கூறியது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளோம். அவர் பதிலளித்த பிறகு, கட்சியின் ஒழுங்காற்றுக் குழு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)

**

.

**

[ரித்தீஷ் மனைவி மீது புகார்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/51)

**

.

**

[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)

**

.

**

[இடைத்தேர்தல்: கடைசி கட்ட கரன்சி நிலவரம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/34)

**

.

**

[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share