gமாநில அரசுகளுக்கு எதிராகப் பாரபட்சமா?

public

ஒருங்கிணைந்த கூட்டாட்சி மீது மத்திய அரசு நம்பிக்கை வைத்துள்ளது என்றும், மாநில அரசுகளுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

தெலங்கானாவின் ஐதராபாத் நகரில், சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு இன்று தொடங்கியது. முன்னதாக இந்த மாநாடு உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று காலை ஐதராபாத் வந்தார்.

பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், “மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது என்பதைப் பார்க்காமல், ஒருங்கிணைந்த கூட்டாட்சியின் மீது மத்திய அரசு அர்ப்பணிப்போடு உள்ளது. போட்டி நிறைந்த மற்றும் ஒருங்கிணைந்த கூட்டாட்சியை ஊக்குவிக்கிறோம். தெலங்கானாவின் வளர்ச்சியில் நாங்கள் எந்த முட்டுக்கட்டையும் போடவில்லை” என்று பேசினார்.

மேலும், தெலங்கானா மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை மாற்றுவதற்காகத் தோளோடு தோள் கொடுப்போம் என்று பேசிய மோடி, “அரசியல் பார்த்து மாநில அரசுகளுக்கு எதிராக மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதில்லை” என்றும் விளக்கமளித்தார்.

பின்னர், ஐதராபாத் நகர மெட்ரோ ரயில் சேவையைக் கொடி அசைத்து அவர் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மியாப்பூர்-நாகோல் இடையே 30 கி.மீ தூரம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. மியாப்பூரிலிருந்து நகோல் வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் 24 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். மியாபூர் – குகட்பள்ளி இடையே, மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடியும், முதல்வர் சந்திரசேகர ராவும் பயணித்தனர்.

தெலங்கானாவின் முதல் மெட்ரோ ரயிலான இதனைப் பெண் ஓட்டுநர் ஒருவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0