தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா, அடுத்ததாக மல்டி ஸ்டார்கள் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி சினிமாவுலகிலும் கதாநாயகியாக நடித்துவருபவர் தமன்னா. பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் கவனம்பெற்ற அவர், தற்போது தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவுலகின் முன்னணி நடிகர்களான வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோர் நடிக்கவிருக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அனில் ரவிபுடி இயக்கத்தில் ‘F2’ (Fun & Frustration) என்ற பெயரில் உருவாகவிருக்கும் இதன் டைட்டில் போஸ்டரை உகாதி பண்டிகையன்று வெளியிட்டனர்.
வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். வருண் தேஜுக்கு ஜோடியாக மெஹ்ரீன் நடிக்கிறார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களை தயாரித்த தில் ராஜு இதனைத் தயாரிக்கிறார். ஜூன் மாதம் இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது.�,