Gபொலிவை இழந்த தங்க விற்பனை!

public

தேவை குறைந்ததால் தங்கத்தின் விலை சர்வதேசச் சந்தையில் சரிந்துள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நவம்பர் 10ஆம் தேதியன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.180 சரிந்து ரூ.32,070ஆக இருந்துள்ளது. உள்ளூர் நகை விற்பனையாளர்களிடமிருந்து தேவை குறைந்துள்ளதாலும், சர்வதேசச் சந்தையில் வலுவிழந்த சூழல் காணப்படுவதாலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.தொழில் ஆலைகள் மற்றும் நாணய உற்பத்தியாளர்கள் வெள்ளியை வாங்குவதை குறைத்துக்கொண்டதால் வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.38,000ஆக உள்ளது.

சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,210.40 டாலராக இருந்துள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 14.25 டாலராக இருந்துள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களில் மட்டும் ரூ.440 சரிந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.400 சரிந்து ரூ.38,000ஆக இருந்துள்ளது. வாராந்தர அடிப்படையில் வெள்ளியின் விலை ரூ.690 சரிந்து கிலோவுக்கு ரூ.36,880ஆக இருந்துள்ளது. வெள்ளி நாணயங்களின் வாங்கும் விலை 100 காசுகளுக்கு ரூ.75,000ஆகவும், விற்கும் விலை ரூ.76,000ஆகவும் இருந்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *