gபிக்பாஸ் பிரபலம் வெளியிட்ட சர்ப்ரைஸ்!

Published On:

| By Balaji

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்துள்ள டேனியல், இன்று அவரது திருமண புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேனியல் அன்னி போப், நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். வெளியே வந்த டேனியல், அவருக்கும் அவரது நீண்ட நாள் காதலியான டெனிஷாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்றதாக் கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து டேனியல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் மனைவி டெனிஷா டேனியலை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் இருவருக்கும் முன்பே பதிவு திருமணம் நடந்து முடிந்தது. சில குடும்ப பிரச்சினைகளின் காரணமாக இந்த அற்புதத் தருணத்தை உங்களில் பலருக்கு என்னால் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. கணவன் மனைவியாக எங்களின் புது வாழ்வைத் தொடங்க உங்களது வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டிலிருந்து நேற்று வெளியே வந்திருந்த டேனியல், நான் ஏதும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share