�பகுத்தறிவாளர்கள் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிபிஐயையும் சிஐடி துறையையும் கேள்விகேட்டு விரைவில் அவர்களைக் கண்டுபிடிக்குமாறு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 22) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றின் விசாரணையானது நீதிபதிகள் எஸ்.சி.தர்மதிகாரி மற்றும் பாரதி தாங்கரே ஆகியோர் முன்பாக வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், குற்றவாளிகளைப் பிடிக்க இரண்டு துறைகளும் தனித்தனியே குழுக்களை அமைத்தீர்கள். இதுவரை குற்றவாளிகளைப் பிடிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினர். மேலும், குற்றவாளிகளைப் பிடிக்க ஈடுபாட்டுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
தபோல்கரைக் கொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க சிபிஐ நியமிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பன்சாரே கொலை வழக்கை விசாரிக்க சிஐடி துறை நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாணையின்போது சிபிஐயின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் சிலரை கைது செய்ய அரசின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார். சிபிஐயும் சிஐடி துறையும் தத்தம் வழக்கின் விசாணை அறிக்கையை சீலிட்ட கவர்களில் சமர்ப்பித்த பின்னர் நீதிபதிகள் விரைவில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டனர்.�,