குட்கா லஞ்ச விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என்று அதிமுக பன்னீர் அணி மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை போன்ற பகுதிகளில் மறைமுகமாக குட்கா விற்பனை செய்வதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையிலிருந்து தொடர்ந்து வெளிநடப்பு செய்துவந்தனர். இதுகுறித்து திமுக சார்பில் சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் இன்று ஜூலை 9ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக-வின் பன்னீர் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வா.மைத்ரேயன்,’ அதிமுக-வின் அணிகள் இணைப்பு என்பது சாத்தியமில்லாதது. குட்கா பிரச்னை குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், இந்த பிரச்னை குறித்து நாடளுமன்றத்தில் குரல் எழுப்புவேன்’ என்று தெரிவித்துள்ளார்.�,