gதொழில் நிறுவனங்களை ஈர்க்கும் ஜிஎஸ்டி!

Published On:

| By Balaji

முந்தைய மதிப்புக் கூட்டு வரி (வாட்) முறையில் பதிவு செய்யப்பட்டிருந்த சுமார் 1,800 தொழில் நிறுவனங்கள் தற்போது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறைக்கு மாறுவதற்கு விண்ணப்பித்துள்ளன.

ஜூலை மாதத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், தற்காலிக ஜிஎஸ்டி ஐ.டி. கொண்ட தொழில் நிறுவனங்கள் புதிய ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “அண்மையில் வழங்கப்பட்ட அனுமதியின் வாயிலாக, சுமார் 1,800 தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி முறைக்கு மாறியுள்ளன. மாநில வரித் துறை அதிகாரிகள் இன்னும் தகவல்களைச் சேகரித்து வருவதால் இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறினார்.

தற்போதைய நிலையில், 1.15 கோடிக்கும் மேலான தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 63.76 லட்சம் நிறுவனங்கள் முந்தைய சேவை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி முறைகளிலிருந்து ஜிஎஸ்டிக்கு மாறியுள்ளன. மேலும், 51 லட்சம் நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்துள்ளன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share