பல தரப்பட்ட நுழைவுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தொடங்கியுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்குத் தேவையான NET எனப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கு, வரும் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது டிசம்பர் 9 முதல் 23ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படவுள்ளது. இத்தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதியன்று வெளியிடப்படும்.
மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் பயில்வதற்கான நுழைவுத் தேர்வான ஜெஇஇ மெயின் தேர்வுக்கு, செப்டம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள், கணினி வழியாக ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, இதன் முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்படும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு அவசியப்படும் GATE தேர்வுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2, 3 மற்றும் 9, 10ஆம் தேதிகளில் நடைபெறும் எனத் தேர்வை நடத்தும் சென்னை ஐஐடி அறிவித்துள்ளது. இத்தேர்வின் முடிவுகள் மார்ச் 16ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது. இது பற்றிய கூடுதல் விவரங்களை gate.iitm.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
�,”