இந்திய அளவில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க, அதற்கு நேர் எதிராக தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. காங்கிரஸ் போட்டியிட்ட தேனியைத் தவிர அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. திருச்சியில் போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தன்னை எதிர்த்த தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை விட 4,59,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
வெற்றி தொடர்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சகிதம் திருச்சியில் 23ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “திருச்சி மக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். ஏனெனில் ஒரு பைசா கூட கொடுக்காமல் வெற்றிபெற்றுள்ளேன். பணம் கொடுக்காமலேயே வெற்றிபெற்றது மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது” என்று தெரிவித்திருந்தார். இதுபோலவே தான் ஒரு பைசா கூட கொடுத்து வெற்றிபெறவில்லை என்று பல பேட்டிகளில் குறிப்பிட்டுவருகிறார். தொடர்ந்து திருநாவுக்கரசர் உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.எஸ்.அழகிரியுடன் கடந்த 24ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில் திருநாவுக்கரசர் மீது ஸ்டாலின் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள். இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “திருநாவுக்கரசர் தன்னுடைய பேட்டிகளில் தான் ஒரு பைசா கூட கொடுக்காமல் வெற்றிபெற்றுள்ளேன் என்று பெருமையாக கூறிவருவது ஸ்டாலினுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தான் மட்டும் பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றேன் என திருநாவுக்கரசர் கூறுகிறார் என்றால், திமுக வேட்பாளர்கள் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துதான் வெற்றிபெற்றிருகிறார்கள் என்று சொல்ல வருகிறாரா? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது எங்களுக்கு புரியவில்லை என தன்னை சந்திக்க வந்த மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் தனது வருத்தத்தை ஸ்டாலின் பகிர்ந்துகொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தனர். திருநாவுக்கரசர் அதனை யதார்த்தமாகவே சொல்லியிருந்தாலும், அது தேவையில்லாத ஒன்றுதான் என்று கூறுகிறார்கள் திமுகவினர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல்.ஏ.க்களை இழுக்க எடப்பாடி தீவிரம்!](https://minnambalam.com/k/2019/05/25/81)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[மத்திய அமைச்சராகிறார் ஹெச்.ராஜா?](https://minnambalam.com/k/2019/05/225/55)
**
.
**
[மகனுக்கு கப்பல் துறை கேட்கும் பன்னீர்?](https://minnambalam.com/k/2019/05/25/25)
**
.
**
[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)
**
.
.
�,”