Gதிமுக எம்.பி.க்கள் கூட்டம்!

Published On:

| By Balaji

புதிதாக வெற்றிபெற்றுள்ள திமுக எம்.பி.க்களின் கூட்டம் நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 37 இடங்களில் வெற்றிபெற்றது. சிதம்பரம் உள்ளிட்ட சில தொகுதிகளைத் தவிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசம் லட்சங்களில் இருந்தது. 23 இடங்களில் வெற்றிபெற்ற திமுக இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்.பி.க்கள் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலினை தனித் தனியாக சந்தித்து வெற்றிச் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். இதுபோலவே கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறி நன்றி தெரிவித்துச் சென்றனர்.

இந்த நிலையில் நாளை மாலை 5 மணியளவில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (மே 24) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் சனிக்கிழமை (மே 25) சென்னை அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது புதிய மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் திமுக மக்களவை குழுத் தலைவர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 3ஆம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் திமுக சார்பாக நன்றி அறிவிப்புக் கூட்டமும் நடத்தப்படவுள்ளது. சென்னை நந்தனத்திலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share