gதமிழிசையை புறக்கணித்தது ஏன்? அமைச்சர்

Published On:

| By Balaji

தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் அதிமுக கலந்துகொள்ளாதது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டிக்கு இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சியான பாஜக இதுவரை அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிக்கவில்லை. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனாலும், பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாக முதல்வர் விளக்கம் அளித்திருந்தார்.

இதற்கிடையே பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதை முன்னிட்டு, சென்னையில் நேற்று அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். ஆனால், அதிமுகவிலிருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இன்று (செப்டம்பர் 30) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், தமிழிசை பாராட்டு விழாவில் அதிமுக சார்பில் யாரும் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “எல்லோரும் ஒரே கூட்டணியில்தான் இருக்கிறோம். தேர்தல் நேரம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை” என்று பதிலளித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share