gஜெயம் ரவி ’25’ படத்தில் பாலிவுட் வில்லன்!

Published On:

| By Balaji

ரோமியோ ஜூலியட் இயக்குநர் லக்‌ஷமன் இயக்கும் ஜெயம் ரவியின் 25ஆவது படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படத்திற்கு படம் மாறுபட்ட கதைகளில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடம் பிடித்திருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அடங்கமறு. கார்த்திக் தங்கவேல் இயக்கிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பின் ஜெயம் ரவி கோமாளி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் சம்யுக்தா ஹெக்டே ஆகியோரும் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ஜெயம் ரவி அடுத்ததாக லக்‌ஷமன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாக உருவாகிறது. இதில் லக்‌ஷமனும் ஜெயம் ரவியும் ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களுக்கு பின் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நித்தி அகர்வால் நடிக்கிறார். மேலும் வில்லனாக நடிக்க பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது, பாலிவுட் நடிகர் ரோனித் ராய் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என தெரியவந்துள்ளது. இவர் இந்தியில் வெளியான காபில், அக்லி ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருப்பவர்.

ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா தயாரிக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கவுள்ளார். தற்போது ஜெயம் ரவி, கோமாளி படத்தின் புரொமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். 9 வேடங்களில் நடிக்கும் இப்படத்தின் 6 ‘லுக்’குகள் வெளியான நிலையில், அடுத்தடுத்த நாட்களில் மீதமுள்ள 4 ‘லுக்’குகளும் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)

**

.

**

[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)

**

.

. **

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

**

[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share