Gசொத்து வரி: மதுரை முதலிடம்!

public

அதிக சொத்து வரி விதித்துள்ள நகரமாக மதுரை உருவெடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்ச சொத்து வரி விதிக்கப்பட்டுள்ள நகராக மதுரை உருவெடுத்துள்ளது. மதுரையில் சொத்து வரி உயர்வுக்காக இந்த ஆண்டு ஏப்ரலில் முன்மொழியப்பட்ட தீர்மானம் 2019ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் அமலாகிறது. 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு மதுரையில் 4.50 மடங்கு சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 1998ஆம் ஆண்டில் மதுரையில் சொத்து வரி 3 அடிக்கு ரூ.0.66 ஆக மட்டுமே இருந்தது. ஆனால் இப்போது மதுரையில் சொத்து வைத்திருப்பவர்கள் சதுர அடி ஒன்றுக்கு ரூ.4.50 செலுத்த வேண்டும்.

இதுகுறித்து மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பாட்டு மையத்தின் செயலாளர் டி.ஆர்.தேசிகாச்சாரி *டி.என்.என்* ஊடகத்திடம் பேசுகையில், ”சதுர அடிக்கு ரூ.0.55 என்ற வீதத்தில் 1993ஆம் ஆண்டில் சொத்து வரி வசூலிக்கப்பட்டது. இது ஆண்டுக்கு ரூ.6.60 ஆக இருந்தது. இது 1998ஆம் ஆண்டில் ரூ.0.66 என்ற வீதத்தில் திருத்தியமைக்கப்பட்டது. அதன்பிறகு படிப்படியாக 450 விழுக்காடு உயர்த்தப்பட்டு 2008ஆம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.3 என்ற வீதத்தில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு வாடகை கணக்கீட்டின் அடிப்படையில் 27 விழுக்காடு சொத்து வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகபட்ச வரி விதிப்பாகும்” என்று கூறியுள்ளார்.

மதுரை கார்பரேசன் செப்டம்பர் 18ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘ஏ பிரிவில் வரும் சொத்துகளுக்கான சொத்து வரி சதுர அடி ஒன்றுக்கு ரூ.3 என்ற வீதத்தில் உயர்த்தப்படுகிறது’ என்று அறிவித்துள்ளது. இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால் மாநகராட்சியின் பல்வேறு தேவைகள் பூர்த்தியாகும் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *