சென்னை வாசிகளின் குடிநீர் பிரச்சினையைக் குறைக்க மெட்ரோ குடிநீர் வாரிய நிர்வாகம் 3,000 லிட்டர் தண்ணீர் லாரிகளைக் கூடுதலாக இயக்க முடிவுசெய்துள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை வாசிகளின் குடிநீர் ஆதாரமான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு விட்டதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. காலி குடங்களுடன் தண்ணீர் லாரிகளுக்காகக் காத்துக் கிடக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த கோடைக் காலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான சென்னை மக்கள் மெட்ரோ நீரையே நம்பியுள்ளனர். சென்னையில் வசிப்பவர்கள் ஆன்லைன் மூலம் கட்டணத்தைச் செலுத்தி மெட்ரோ நீரை பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மெட்ரோ நீருக்கான கட்டணத்தைப் பொறுத்தவரையில், 6,000 லிட்டர் மெட்ரோ நீருக்கு விலை ரூ.475 ஆகவும், 9,000 லிட்டர் நீருக்கு விலை ரூ.700 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, ஒருவர் ஒருமுறை மெட்ரோ நீருக்குப் பதிவு செய்து பெற்றிருந்தால், மீண்டும் ஏழு நாட்கள் கழித்துத்தான் மெட்ரோ நீரைப் பெற முடியும். குறுகிய தெருக்களில் வாழும் மக்களுக்கு 3,000 லிட்டர் டேங்கர் லாரிகள் வந்துசெல்வதே வசதியாக உள்ளது. எனவே 120 லாரிகளில் 3,000 லிட்டர் சிண்டெக்ஸ் டேங்க்குகளை அமைக்க மெட்ரோ குடிநீர் வாரிய நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.
சென்னை அடையார் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “நான் ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒருமுறை மெட்ரோ நீருக்கு முன்பதிவு செய்கிறேன். அப்போதுதான் ஏழு முதல் பத்து நாட்களுக்குள் தண்ணீர் வந்து சேரும். 3,000 லிட்டர் தண்ணீர் பெறுவதற்கு எனக்கு ரூ.400 செலவாகிறது. 6,000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.475தான் என்றாலும், அதற்காக இரண்டு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றார். சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் 3,000 லிட்டர் டேங்கர்களைத்தான் பதிவுசெய்கின்றனர்.
எனினும், பிற பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்களுக்கு நீரின் தேவை அதிகமாக இருப்பதாக 9,000 மற்றும் 12,000 லிட்டர் டேங்கர்களையே பதிவுசெய்கின்றனர்.
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ.க்கள் பலம்: அதிமுகவில் மோதிக்கொள்ளும் மா.செ.க்கள்!](https://minnambalam.com/k/2019/06/10/66)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[மோடிக்கு வானம் கொடுத்த பாகிஸ்தான்](https://minnambalam.com/k/2019/06/11/21)
**
**
[எட்டு வழிச் சாலை ஆர்வம் காவிரியில் இல்லாதது ஏன்?](https://minnambalam.com/k/2019/06/11/20)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”