=
சீனத்தில் ஆபாச இணையதளங்கள் கட்டுப்படுத்தப்படும் என்று நேற்று (ஆகஸ்ட்-22) சீன அதிபர் ஜி ஜின்பிங்க் தெரிவித்துள்ளார்.
தலைநகர் பீஜிங்கில் சீன அதிபர் ஜி ஜின்பிங்க் தலைமையிலான ஊடகம் மற்றும் இணைய தளத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஜி ஜின்பிங்க் கூறியதாவது:
இணைய தளமானது சரியானதையும் துாய்மையைானதையும் கொண்டிருக்க வேண்டும் அதிலுள்ள ஆபாச உள்ளடக்கம் பண்பாட்டுத் தளத்தில் எதிர்க்கப்பட வேண்டும். அரசானது இணைய தளத்தின் மீது கடுமையான கட்டுபாடுகளை விதித்துவருகிறது. இதன் மூலம்தான் சமூகத்தின் உறுதித்தன்மையைப் பராமரிக்க முடியும். ஆபாச மற்றும் வக்கிரமான உள்ளடக்கமும் கொண்டு அங்கீகரிக்கப்படாத செய்திகள் பரப்பப்படுவதையும் தடுக்க முடியும் என்று அவர் பேசினார்.
இதற்கிடையே மொபைல் விளையாட்டுகள் லைவ் ஆபாசமான உள்ளடக்கங்கள் மீது அரசு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மொபைல் கேம்களுக்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது வரை சீனத்தில் ஆபாசங்களையும் நச்சுப்பிரச்சாரங்களையும் கொண்டிருந்த 1,28,000 இணைய தளங்களை அரசு தடை செய்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான ஜின்ஹிவா தெரிவித்துள்ளது.
ஆனால் அரசின் தடைகளை மீறி இளைஞர்கள் மத்தியில் ஆபாச வீடியோக்கள் பரவி வருகின்றன என்பது அரசுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
�,