Gசட்டமன்றத்துக்குள் கஞ்சா!

Published On:

| By Balaji

புதுச்சேரி மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் அதிகளவு விற்பனை செய்வதை ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் சட்டமன்றத்துக்குள் கஞ்சா எடுத்துச் சென்றதாக அதிமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கூறினார்.

தமிழக சட்டமன்றத்துக்குள் எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் ஹான்ஸ், பான்பராக் பாக்கெட்களை எடுத்துச் சென்று சலசலப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 12) கஞ்சா பொட்டலங்களுடன் வந்து அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் அதிர்ச்சி அளித்தார். சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, புதுச்சேரியில் கஞ்சா அபின், ஹான்ஸ், பான்பராக், உள்ளிட்ட போதை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாக அன்பழகன் குற்றம்சாட்டினார். இவரின் செயல் சட்டமன்றத்துக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ. அன்பழகனை தொடர்புகொண்டு, சட்ட மன்றத்துக்குள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் எடுத்து சென்றதைப் பற்றிக் கேட்டோம்.

இதற்குப் பதிலளித்த எம்.எல்.ஏ. ,”புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்கள் இங்கேதான் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

வீதிக்கு வீதி சந்துக்கு சந்து, குறிப்பாகப் பள்ளி, கல்லூரி, கோயில் உள்ள பகுதிகளில் விற்பனை செய்து மாணவ சமுதாயத்தை சீரழித்து வருகிறார்கள். புதுச்சேரியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளனர்.

மாஃபியா கும்பல் போதைப் பொருள்களை விற்பனை

செய்வதற்கு 300க்கும் மேற்பட்ட இளைஞர்களைப் பயன்படுத்தி

வருகிறது என்று தெரிவித்த அன்பழகன், அரசு , போலீஸ் பாதுகாப்புடன் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை அமோகமாக விற்பனை செய்து வருவதை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பார்வைக்கு கொண்டு செல்லத்தான் சட்டமன்றத்துக்குள் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை எடுத்துச்சென்றேன் என்று கூறினார்.

ஆட்சியாளர்கள் கௌரவம் பார்க்காமல் தடைசெய்யப்பட்ட போதை பொருள்களைத் தடுத்து இளைஞர்களையும் மாணவ சமுதாயத்தையும் காப்பாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share