gகையிருப்பை உயர்த்திய சர்க்கரை ஆலைகள்!

Published On:

| By Balaji

சர்க்கரை ஆலைகளிடம் உள்ள சர்க்கரை கையிருப்பு 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.

இறக்குமதி மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் விதமாக எரிபொருட்களில் எத்தனாலைக் கலக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சிக்குப் போதுமான அளவில் எத்தனால் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக 100 விழுக்காடு கரும்புச் சாற்றிலிருந்து மட்டுமே தயாரிக்கப்படும் எத்தனாலுக்கான விலையை 25 விழுக்காடு உயர்த்த ஒன்றிய அரசு செப்டம்பர் 12ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.

பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலின்படி 100 விழுக்காடு கரும்புச் சாற்றிலிருந்து மட்டுமே தயாரிக்கப்பட்ட எத்தனால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.59.13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை இதற்கு முன்பு லிட்டர் ஒன்றுக்கு ரூ.47.13 ஆக மட்டுமே இருந்தது. இதையடுத்து நாட்டின் முன்னணி சர்க்கரை ஆலைகளான சிம்பவ்லி சுகர்ஸ், மகதா சுகர் & எனர்ஜி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் & கெமிக்கல்ஸ், கே.எம்.சுகர் மில்ஸ், அவதா சுகர் & எனர்ஜி, பொன்னி சுகர்ஸ், உத்தம் சுகர் மில்ஸ், திரு ஆரூரான் சுகர்ஸ் மற்றும் தால்மியா பாரத் சுகர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட சர்க்கரை ஆலைகள் தங்களது கையிருப்பை இரண்டு நாட்களில் 20 விழுக்காடு அளவுக்கு உயர்த்தியுள்ளன.

தொடர்ந்து இரண்டு பருவங்களாக சர்க்கரை ஆலைகள் தங்களது கையிருப்பை வலுவாக உயர்த்தியுள்ளன. புதன்கிழமை தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தையிலும் சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் 18 விழுக்காடு வளர்ச்சியைக் கண்டுள்ளன. பெட்ரோலில் 25 விழுக்காடு அளவுக்கு எத்தனால் கலப்பை அதிகப்படுத்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது 4 முதல் 5 விழுக்காடு எத்தனால் மட்டுமே எரிபொருட்களில் கலக்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இதனை 10 விழுக்காடாக அதிகரித்து விடுவோம் என்று ஒன்றிய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. எரிபொருள் இறக்குமதிச் செலவைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel