gகுமரியில் கட்சிகளின் மருத்துவ முகாம்!

public

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை மிகக் கடுமையாக பாதித்துள்ள ஒகி புயல் மழை பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல இம்மாவட்டங்கள் மீண்டு வருகின்றன.

இந்நிலையில் மழைக்குப் பிறகான தொற்று நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க இம்மக்களுக்கு மருத்துவ முகாம்கள் இன்றியமையாததாகி உள்ளன. இந்நிலையில் குமரி மக்களுக்கான மருத்துவ முகாம்களை அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி நேரில் பார்வையிட்டு, சாமித்தோப்பு என்ற இடத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது மக்களுக்கு உடல் நல பரிசோதனையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது சாமித்தோப்பு கோயில் நிர்வாகி பாலபிரஜாபதி அடிகளார் உடனிருந்தார்.

இந்நிலையில் திராவிடர் கழகம் ’பெரியார் மெடிக்கல் மிஷன்’ என்ற நமது பெரியார் மருத்துவ உதவிக் குழுமத்தின் சார்பில் குமரி மாவட்டம் மிடாலத்தில் நாளை (டிசம்பர் 6) மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இக்குழுமத்தின் தலைவர் குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் தலைமையில், சுமார் 25 மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் இதற்காக குமரி செல்கின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0