குழந்தைகளும் இணையத்தைப் பயன்படுத்தும் வளர்ச்சிக் காலமிது. இணையத்தின் தேவை இன்றியமையாததாக மாறியிருக்கும் இந்த வேளையில், குழந்தைகள் தவறான இணையப் பயன்பாட்டிற்கு பலியாகிவிடாமல் பாதுகாப்பது அவசியம். இதற்கு தீர்வாக, கிடில் (kiddle) என்னும் சர்ச் எஞ்ஜின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பாக இணையத்தை கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புப் பக்கம் கார்டீன்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறான சொற்கள், ஆபாச தளங்கள், வன்முறை ஆகியவற்றை இது காட்டுவதில்லை. சமூக வலைத்தளங்களின் பெயரை டைப் செய்து தேடினால், லாக்-இன், பதிவு செய்தல் போன்ற விஷயங்கள் தோன்றாமல், அதைப் பற்றிய அறிமுகத்தை மட்டுமே தருகிறது.�,
+1
+1
+1
+1
+1
+1
+1