gகிச்சன் கீர்த்தனா: முட்டைகோஸ் ஆம்லெட்

Published On:

| By Balaji

�ஊரடங்கு நேரத்தில் எல்லா இடங்களிலும் சுலபமாகவும் மலிவாகவும் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்கள் முட்டை, முட்டைகோஸ், கேரட். இவற்றின் காம்பிஷேனுடன் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதாகச் செய்ய உதவும் இந்த முட்டைகோஸ் ஆம்லெட். சத்துகள் நிறைந்த இந்த ஆம்லெட்டைச் சூடாக செய்து பரிமாறுங்கள்.

**என்ன தேவை?**

முட்டை – 4

நறுக்கிய முட்டைகோஸ் – கால் கப்

துருவிய கேரட் – கால் கப்

மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – 10

பச்சை மிளகாய் – ஒன்று

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெயைச் சூடாக்கவும். அதில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் வதக்கவும். இதைக் கிண்ணத்துக்கு மாற்றவும். இதில் உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், துருவிய கேரட், கறிவேப்பிலை இலைகள், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, முட்டைகளை உடைத்துச் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு தவாவைச் சூடாக்கி, சிறிதளவு எண்ணெயைத் தடவி, முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி மிதமான தீயில் சமைக்கவும். மறுபுறம் புரட்டி ஒரு நிமிடம் சமைக்கவும். முட்டைகோஸ் ஆம்லெட் தயார்.

[நேற்றைய ரெசிப்பி: சீஸ் சாண்ட்விச்](https://minnambalam.com/k/2020/04/06/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share