விமல், வரலஷ்மி சர்த்குமார் நடிப்பில் உருவாகும் கன்னி ராசி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான களவானி 2, பல்வேறு சிக்கல்களுக்குப் பின் வெளியானாலும் தொடர்ச்சியான தோல்விப் படங்களுக்குப் பின் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. களவானி படத்தின் முதல் பாகம் அளவிற்கு ரசிகர்களை ஈர்க்காவிட்டாலும் விமலின் மார்க்கெட்டை தூசு தட்டியிருக்கிறது களவானி 2.
2017ஆம் ஆண்டே விமல், வரலஷ்மி நடிப்பில் படப்பிடிப்பை தொடங்கிய கன்னிராசி படம் நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்தது. ஆரம்பத்தில் ஜெமினி கணேசன் என தலைப்பிடப்பட்ட படம், கன்னி ராசி என மாற்றப்பட்டது. இந்நிலையில் கன்னி ராசி படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது.
காதல் திருமணத்தை வெறுக்கும் விமல் ஊரைக் கூட்டி வீட்டில் பார்க்கும் பெண்ணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என முடிவில் இருக்கிறார். படத்தில் விமலின் பெயர் ஜெமினி கணேசன். அவரது முடிவுக்கு வில்லியாக விமலையே துரத்தி துரத்திக் காதலிக்கும் வரலக்ஷ்மி கதைக்குள் வர, அதன் பின் நடக்கும் மோதலையும் காதலையும் கலகலப்பாக டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்கள் கன்னி ராசி படக்குழுவினர்.
யோகிபாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். விஜய்யின் புலி படத்தை தயாரித்த ஷமீம் இப்ராஹிம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
[கன்னி ராசி டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=9jBNN_0eQVM&feature=player_embedded)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”