gஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்!

Published On:

| By Balaji

ஒரு கப் காபி!

ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும்.

அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் முதிர்ந்த பெண் தன் கையினால் இளம் குழந்தையின் வாயை மூடி அதன் அழுகையைக் கட்டுப்படுத்துவது போன்றிருக்கும்.

இந்தச் சித்திரத்தைப் பார்த்தவுடன் சிலருக்கு இன்செஸ்ட் கதைகள் நினைவுக்கு வரலாம். ஆனால், அதுவும்கூடச் சில நொடிகளில் காணாமல்போகும். ஐரோப்பியக் கண்டத்தில் சில நூறு ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை மையமாகக்கொண்டு இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

நாட்டை ஆளும் மன்னனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் கூறி, ஒரு முதியவர் கைது செய்யப்படுகிறார். உணவு, நீர் எதுவுமின்றி அவர் சிறையில் வாடுகிறார். தந்தையைக் காண வரும் மகள், அவரது வறிய தோற்றம் கண்டு வருந்துகிறாள். கையில் எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனும் கட்டுப்பாடு உள்ளதால், வேறு வழியின்றித் தாய்ப்பால் ஊட்டித் தந்தையின் பசியைப் போக்குகிறாள். இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட சிறை அதிகாரி புல்லரித்துப் போகிறார் அல்லது மனம் மாறுகிறார் என்று சில கதைகளில் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடந்து முடிவதாக இந்தக் கதை அமைகிறது. இதற்கு மாறாக, பல ஆண்டுகள் தொடர்ந்து அம்மகள் தந்தைக்குப் பாலூட்டியதாகவும், ஒரு நாள் உண்மை தெரிந்து அம்மகளின் தியாகத்துக்காக அந்தத் தந்தையை விடுதலை செய்ததாகவும் விவரணைகள் நீள்கின்றன.

எந்த ஒன்றையும் பார்த்தவுடன் எந்த முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதை இது உணர்த்துகிறது. உதாரணமாக, குறை தூரத்தில் இருக்கும் ஒரு சுவருக்குப் பின்னால் பெண்ணின் அல்லது ஆணின் தலை தெரிவதாக வைத்துக்கொள்வோம். சுவருக்குப் பின் மேடு, பள்ளம் அல்லது சமவெளி இருக்கலாம். தலையை நீட்டும் நபர் அங்கு உட்கார்ந்திருக்கலாம் அல்லது நின்றுகொண்டிருக்கலாம் அல்லது உயரமான கட்டிலில் படுத்துக்கொண்டு தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த சாத்தியங்களை மீறி அந்த நபரின் முகபாவனைகளும் அசைவுகளும் நம் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கும்.

ஒவ்வொருவரும் அடுத்தவர் குறித்து இப்படியொரு சித்திரத்தை வாழ்நாள் முழுவதும் வரைந்துகொண்டிருக்கிறோம். இடையில் இருக்கும் சுவரைத் தாண்டினாலோ அல்லது எட்டிப் பார்த்தாலோ உண்மையை ஓரளவுக்கு உணர முடியும்.

மீண்டும் அந்தத் தந்தை மகள் விஷயத்துக்கே வருவோம். ஐரோப்பியக் கண்டத்தில் தொடர்ந்துவரும் இந்தச் சித்திரங்களும் கதைகளும் நமக்கு ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்கின்றன. அம்மகள் செலுத்தும் அன்புக்கு முன்னால் நமது முன்முடிவுகள் மட்டுமல்ல, இந்த உலக நியதிகளும் தூள் தூளாகும் என்பதே அது.

**- பா.உதய்**

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share