கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகவும் பழமைவாய்ந்த விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தனது சேவையை நிறுத்தியுள்ளது. இதனால் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் இண்டிகோ உள்ளிட்ட இதர நிறுவனங்கள் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் தங்களது பங்குகளை அதிகரித்துக் கொண்டுள்ளன. இண்டிகோ 50 சதவிகிதப் பங்குகளைக் கொண்டுள்ள நிலையில், ஏர் ஏசியா, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.
இந்திய விமானங்களில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1.13 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2018 ஏப்ரல் மாத அளவை (1.15 கோடி) விட 2 சதவிகிதம் குறைவாகும். இதற்கு முன்னர் கடைசியாக 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் 3 சதவிகிதம் சரிவு ஏற்பட்டிருந்தது. அப்போது விஜய் மல்லையாவின் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்டதால் அந்த மாதத்தில் மொத்தம் 48.6 லட்சம் பேர் மட்டுமே விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். இந்த விவரங்களைப் பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக மக்களவைக் குழுத் தலைவர் யார்?](https://minnambalam.com/k/2019/05/24/63)
**
.
. **
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
.�,”