�
கடந்த ஒரு வருட காலமாக இந்தியச் சந்தையிலிருந்து விலகியிருந்த பிலிப்ஸ் நிறுவனம் மீண்டும் கால் பதிக்கத் தயாராகி வருகிறது.
முன்னதாக இந்திய விற்பனைச் சந்தையில் வீடியோகான் நிறுவனத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டு பிலிப்ஸ் டிவி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் காரணமாக வீடியோகான் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் இந்தியச் சந்தையிலிருந்து விலகி இருந்தது பிலிப்ஸ் நிறுவனம். தற்போது அதன் கைவசம் உள்ள 1,000 கோடி டாலர் மதிப்புடைய காப்புரிமைகளைக் கொண்டு டிவி மற்றும் தொலைபேசிகளை மறுவெளியீடு செய்வதன்மூலம் சந்தையில் மீண்டும் கால் பதிக்கவிருக்கிறது.
எலெக்ட்ரானிக் தயாரிப்பு நிறுவனமான டிக்சனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 24 இஞ்ச் மற்றும் 65 இஞ்ச் தொலைக்காட்சிகளை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. மேலும் மிகப் பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களான ரிலையன்ஸ் ரீடைலர், க்ரோமா, விஜய் சேல்ஸ் போன்றவற்றின் மூலமாகவும், மொத்த வியாபாரக் கடைகளின் மூலமாகவும் தனது விற்பனையைத் துவங்கத் திட்டமிட்டிருப்பதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.�,