அமலாபால் படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.மம்முட்டி, நயன்தாரா நடித்து மலையாளத்தில் ஹிட் ஆன ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். சித்திக் இயக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அமலாபாலின் இரண்டாவது இன்னிங்க்ஸ் வெகு தீவிரமாக ஆரம்பித்துள்ளது. இளம் நாயகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருக்கிறார் அமலா பால்.
விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `மாவீரன் கிட்டு’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் விஷ்ணு முற்றிலும் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத்தொடர்ந்து விஷ்ணு, `கதாநாயகன்’, `சின்ட்ரல்லா’, `பொன் ஒன்று கண்டேன்’, `சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அதேநேரத்தில் `முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார். `முண்டாசுப்பட்டி’ படத்தில் இணைந்த அதே கூட்டணி இப்படத்திலும் இணைய உள்ளது. இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக அமலாபால் முதல் முறையாக நடிக்கவிருக்கிறார். சஞ்சய், காளிவெங்கட், ராம்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.இந்நிலையில், இப்படத்திற்கு `மின்மினி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. விஷ்ணு விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை உறுதிபடுத்தி உள்ளார்.�,