திருப்பூர் அமராவதி அணை நிரம்பி வருவதால், அதன் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்திலுள்ள பல அணைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அமராவதி அணை 90 அடி உயரமுள்ளது. நேற்று (ஜூலை 15) மாலை வரை இந்த அணையில் 80 அடி வரை நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் அணை திறக்கப்படலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, அமராவதி ஆற்றில் வெள்ளம் பாய வாய்ப்புள்ளதால் அதன் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளது மாவட்ட நிர்வாகம். அதோடு, அமராவதி ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, அதனைக் கடக்கவோ முயற்சிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
�,