சென்னை: குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச உணவு!

Published On:

| By Balaji

சென்னையில் மழை, வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி வரை இலவச உணவு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாகச் சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. துரைப்பாக்கம், பெரும்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குடிசைப் பகுதிகளில் 5.3 லட்சம் குடும்பங்கள் உள்ளன. 23 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சமுதாயக் கூடங்கள் மற்றும் அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 13ஆம் தேதி வரை மூன்று வேளையும் இலவச உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

முன்னதாக, கொரோனா வைரஸ் பரவல் கடுமையாக இருந்தபோது, ஏழை எளிய மக்களுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

**பிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share