பெண்கள் பாதுகாப்புக்கும், அவர்கள் மீதான பாலியல் தாக்குதலுக்கும் அவர்கள் உடுத்தும் உடை ஒரு காரணம் என்ற எண்ண ஓட்டம் பரவலாக இருந்து வருகிறது. இதுகுறித்த விவாதங்கள் எப்போதும் தலை தூக்கியே இருக்கின்றன. ’அந்தந்த காலத்துக்கு ஏற்ப உடையை மாற்றிக் கொள்கின்றனர்’, ’இந்தியாவுக்கென்று ஒரு கலாச்சாரம் உள்ளது அதற்கேற்ற வகையில் ஆடை அணிய வேண்டும், ‘ஆடைகள் அணிவது என்பது அவரவர் விருப்பம்’ என ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் ஆடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியே இல்லை என்ற வகையில், பெங்களூருவில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் என்ற பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அந்த பெண் டிசர்ட் மற்றும் சார்ட்ஸ் அணிந்திருந்தார். அந்த வழியாக வேறு பைக்கில் ஒருவர் அந்த பெண்ணிடம் சென்று உங்களுக்கு வேறு ஆடையே இல்லையா என கத்தியுள்ளார். இதைப் பார்த்த இருவரும் பைக்கை நிறுத்திவிட்டு அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது அந்த நபர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்திய விதிகளைப் பின்பற்ற வேண்டும், கலாச்சாரத்துக்கு ஏற்ற்அ சரியான உடையை அணியுங்கள் என்று மீண்டும் மீண்டும் கத்துகிறார். இதனை அந்த பெண்ணின் ஆண் நண்பர் வீடியோ எடுத்துள்ளார்.
இதை அறிந்த அந்த நபர் அமைதியாகி ’ஐ ஆம் கிராட்ஜுவேட்’ என்றும் இந்திய ஆடைகளை உடுத்த தான் சொன்னேன் என்றும் சமாளித்துச் சென்றுள்ளார்.
�,”