xவேலைவாய்ப்பு: மீன்வள ஆய்வக அலுவலகத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சென்னை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் கட்டுப்பாட்டில் இருக்கும் சேத்துபட்டு ஆய்வக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மீன்வள உதவியாளர்

கல்வித் தகுதி: தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். நீச்சல், மீன்பிடித்தல், வலை பின்னுதல் மற்றும் அறுந்த வலைகளை பழுது பார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

இணை இயக்குநர்(மண்டலம்)

சென்னை அலுவலகம்,

டி.எம்.எஸ் வளாகம் மூன்றாம் தளம்,

தேனாம்பேட்டை, சென்னை – 600 006.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 02.08.2021 மாலை 5 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021071655.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share