|காசிமேட்டில் இருமடங்காக உயர்ந்த மீன்கள் விலை

Published On:

| By admin

ஞாயிற்றுக்கிழமை என்றாலே வெளிப்பகுதிகளில் இருந்து ஏராளமானோர் காசிமேட்டில் மீன்கள் வாங்க அதிக ஆர்வம் காட்டுவர். விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலில் பிடித்து வரப்படும் மீன்கள் அங்கேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் அனைத்து வகையான மீன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மீன் பிரியர்கள் காசிமேட்டில் குவிவார்கள். இதனால் காசிமேடு மீன் சந்தைகளில் வார விடுமுறை தினத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்படும்

கடந்த 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை ஏற்கனவே சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை பதப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தால் நல்ல விலை கிடைக்கும் என்று இன்று மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் விரத நாட்கள் முடிந்து இன்று பொதுமக்கள் மீன்களை வாங்க ஆர்வமுடன் காசிமேட்டில் குவிந்தினர்.காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் ஏற்கனவே 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

பெரிய வகை வஞ்சிரம் 1300 ரூபாயில் இருந்து 1,800 ரூபாய் வரை விற்கப்பட்டது. சங்கரா 400 ரூபாயில் இருந்து 650 ரூபாய், நெத்திலி 400 ரூபாயிலிருந்து 700 ரூபாய், வவ்வால் 700 ரூபாயிலிருந்து 1200 ரூபாய், கடம்பா 500 ரூபாயிலிருந்து 800 ரூபாய், இறால் 500 ரூபாயிலிருந்து 650 ரூபாய், பாறை 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய், நண்டு 500 ரூபாயிலிருந்து 650 ரூபாய், கொடுவா 550 ரூபாயிலிருந்து 750 ரூபாய், கிழங்கா 450 ரூபாயிலிருந்து 650 ரூபாய்க்கு விலையேற்றி விற்பனை செய்யப்பட்டது. மீன் வரத்து குறைவு, மீன்பிடி தடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share