சிவகாசி-விருதுநகர் சாலையில் கலர் மத்தாப்பு தீக்குச்சி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
சிவகாசி – விருதுநகா் செல்லும் சாலையில் ஆமத்தூா் அருகே குருமூா்த்தி நாயக்கன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த விசாக் (28) என்பவருக்கு சொந்தமானகலர் மத்தாப்பு தயாரிக்கும் தீக்குச்சி ஆலை உள்ளது. இந்த ஆலையில் தொழிலாளா்கள் பலர் மத்தாப்பு தயாரிக்கும் பணிசெய்து வருகின்றனா்.
இந்த ஆலையில் நேற்று(மார்ச் 13)மாலை மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளா்கள் அடுக்கி வைத்தனா். அப்போது, கருமருந்து உராய்வு காரணமாக திடீரென தீ பரவி பட்டாசு அறையில் தீப்பற்றி எரிந்தது. இதில் 2 அறைகள் சேதமடைந்தன. இந்த தீ விபத்தில்
குருமூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்த மு. பஞ்சவா்ணம் (54)
வீ. வீராச்சாமி (64), முத்தாலபுரத்தைச் சோ்ந்த சு. நடராஜன் (50), ஆமத்தூரைச் சோ்ந்த கா. புதுராஜா (54), ஆகியோர் பலத்த தீக்காயமடைந்தனா்.
இதையடுத்து 4 பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி கா.புதுராஜா
வீராச்சாமி மற்றும் முத்தலாபுரத்தை சேர்ந்த நடராஜன் ஆகியோர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த பஞ்சவர்ணம் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து ஆமத்தூா் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடந்த மாதம் மூன்று பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு 30 பேரை பலிவாங்கிய சம்பவம் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில் மீண்டும் ஒருபட்டாசுஆலையில் ஏற்பட்ட விபத்தால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
_சக்தி பரமசிவன்
�,