தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பயோமெட்ரிக் கருவி மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, ஸ்மார்ட் கார்டில் பெயர் இருப்பவர்களில் யாரேனும் ஒருவர் கைவிரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இந்த கைரேகை பதிவு இயந்திரங்களில் அவ்வப்போது கோளாறு ஏற்படுவதால், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்வதில் பிரச்சினை எழுந்தாலும், பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்கும்போது, கைரேகை பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், க்யூஆர் ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்தும், ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,