17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் சரிவைக் கண்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி அதன் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 303 தொகுதிகளை வென்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ 52 இடங்களில் மட்டும்தான் வென்றுள்ளது. இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் வட இந்திய மாநிலங்களான சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள 190 தொகுதிகளில் 7 தொகுதிகளை மட்டும்தான் காங்கிரஸ் வென்றுள்ளது.
இவற்றில் 168 தொகுதிகளில் பாஜக வென்றிருப்பதால் இந்தி பேசும் மக்கள் அதிகம் வாழும் மாநிலங்கள் முழுமையாக பாஜக வசம் உள்ளது என்றே சொல்லலாம். இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமின்றி மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், சண்டிகர், தாதர் & நகர் ஹாவேலி, டாமன் & டையூ, குஜராத், ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவுகள், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தராகாண்ட் ஆகிய 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட இம்முறை வெற்றி பெறவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு இது மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, “இந்த நாட்டின் மிகப் பழமையான கட்சி 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பூஜ்யம் பெற்றுள்ளது. இம்மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள இந்த படுதோல்வியால் நாடு முழுவதும் பல நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளை ராஜினாமா செய்து வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளனர். தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒருவேளை அவர் ராஜினாமா செய்தால், அதை காங்கிரஸ் உயர்மட்டக் குழு ஏற்குமா என்பது கேள்விக்குறிதான்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)
**
.
**
[பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வராவார்: தங்க தமிழ்ச்செல்வன்](https://minnambalam.com/k/2019/05/24/58)
**
.
**
[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)
**
.
**
[அமேதியில் ராகுல் வீழ்ந்த பின்னணி!](https://minnambalam.com/k/2019/05/24/33)
**
.
**
[பலித்தது மின்னம்பலம் – மக்கள் மனம் – ஒரு சோறு பதம்!](https://minnambalam.com/k/2019/05/24/31)
**
.
.�,”