விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் மோஷன் டீசரை இன்று (ஜூலை 17) அவரது பிறந்தநாளை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்திருந்தாலும் அதைத் தொடர்ந்து வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் எதிர்பார்த்தளவு வரவேற்பைப் பெறவில்லை. தற்போது கணிசமான அளவு படங்கள் அவர் கைவசம் உள்ளன.
பிரபு சாலமோன் இயக்கத்தில் காடன், சஞ்சீவ் இயக்கத்தில் விக்ராந்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம், இன்று நேற்று நாளை 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான ஜீவி படத்தின் இயக்குநருடன் இணைந்தும் புதிய படத்தில் பணியாற்றுகிறார்.
தற்போது இவர் முதன்முறையாக மஞ்சிமா மோகனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்கிறார். எஃப்.ஐ.ஆர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை மனு ஆனந்த் தயாரிக்கிறார். ஃபைஸல் இப்ராஹிம் ராய்ஸ் என போஸ்டரில் எஃப்.ஐஆருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மோஷன் டீசரில் கண்கள் தெரிய முகத்தை துணியால் மூடியபடி விஷ்ணு விஷால் தோன்றுகிறார். மேலும் ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்தித்தாள் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. வட தமிழ்நாட்டின் வரை படத்தில் குண்டு வெடிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. இந்தப் படத்திற்கு என்.அஸ்வத் இசையமைக்கிறார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**
**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**
**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**
**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**
**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**
�,”