தினப் பெட்டகம் – 10 (23.11.2018)
**முயல்களைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்:**
1. முயல்களுக்குப் பிறக்கும்போது கண் தெரியாது.
2. முயல்களின் கர்ப்ப காலம் 30 நாட்கள். ஒரு முறையில் 4-12 குட்டிகளைப் பிரசவிக்கும்.
3. முயல் குட்டிகள் நான்கு மாதங்கள் ஆனதில் இருந்தே கர்ப்பம் தரிக்கத் தொடங்கிவிடும். 800 குட்டிகள் வரை ஈன்று, பேரக்குட்டிகள், அவற்றின் குட்டிகள் வரை காண முடியுமாம்.
4. கருத்தடை செய்யப்பட்ட முயல்கள், செய்யப்படாத முயல்களை விட 4 வருடங்கள் வரை அதிகமாக வாழுமாம்.
5. முயல்களின் பற்களின் வளர்ச்சி நிற்பதே கிடையாது. முயல்கள் பற்களை சின்னதாகவே வைத்துக்கொள்ளத்தான் எதையாவது கடித்து மென்றுகொண்டே இருக்கும். ஒரு நிமிடத்தில் 120 முறை வரை மெல்லுமாம்!
6. ஒரு நாளைக்குக் குறைந்தது 3 மணி நேர உடற்பயிற்சியும் விளையாட்டும், முயல்களைச் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள அவசியம்.
7. முயல்களால் எத்திசையிலிருந்து வரும் ஒலியையும் கேட்க முடியும். ஒரே நேரத்தில் இரண்டு திசைகளிலிருந்து வரும் ஒலியைக் கேட்கக்கூடிய திறன் முயல்களுக்கு உள்ளது.
8. காடுகளில் முயல்கள் warrens என்றழைக்கப்படும் பொந்துகளில்தான் வாழும். ஐரோப்பாவில் ஒரு warrenஇல் ஏறத்தாழ 450 முயல்களும், 2000 நுழைவாயில்களும் இருந்தனவாம்!
9. முயல்களால் 360 டிகிரி பார்க்க முடியும்!
10. ஓய்வுநேரத்தில் முயல்களின் இதயத்துடிப்பு, சராசரியாக நிமிடத்துக்கு 130 முறை.
**- ஆஸிஃபா**�,