இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் என்றாலே அதுவும் இடைத் தேர்தல் என்றாலே சாதியும், கரன்சியும்தான் வெற்றிக்கான முக்கியக் காரணிகள் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
அந்த வகையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தல்களிலுமே திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளும் சாதி- பண பலத்தைக் காரணிகளாக வைத்துதான் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தன.
பிரச்சாரத்திலும் கூட சாதி முக்கிய காரணியாக வெளிப்படையாக முன் வைக்கப்படுகிறது. திமுக, அதிமுக இரு தரப்பினருமே கட்சி ரீதியான வாக்குகளைக் கணக்கெடுப்பதை விட, சாதி ரீதியான வாக்குகளையே கணக்கெடுத்து அதற்கேற்றாற்போல் வியூகம் அமைக்கின்றனர். இது ஒருபக்கம் என்றால், மத்திய மாநில உளவுத்துறையினரும் நேரடியாகக் களத்தில் இறங்கிச் சாதி ஓட்டுகளைக் கணக்கெடுத்துவருவதாகச் சொல்கிறார்கள்.
தொகுதியிலிருக்கும் பாமக, விசிக, செட்டியார், முதலியார், உடையார் சமூகத்தினர் எங்கள் வாக்குகள்தான் அதிகம் உங்கள் வாக்குகள்தான் அதிகம் என்று கையில் பட்டியல் வைத்துக்கொண்டு முக்கிய கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களில் ஏறி இறங்கி வருகிறார்கள்.
விக்கிரவாண்டி தொகுதியின் வெற்றி தோல்வியை சாதியும் பணமும்தான் தீர்மானிப்பதாக தேர்தல் களத்தின் ஒவ்வொரு அணுவும் சொல்லும் நிலையில், நமது மின்னம்பலம்.காம் தமிழின் முதல் மொபைல் தினசரி சார்பாக விக்கிரவாண்டி தொகுதியில் சமூக ரீதியான வாக்குகளைப் பற்றிய தரவுகளைத் திரட்டினோம்.
இந்த ரிப்போர்ட்டை சரிபார்க்க விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கியமான அதிகாரி ஒருவரைச் சந்தித்து வருவாய்த் துறையினர் எடுத்த கணக்கையும் மின்னம்பலம்.காம் எடுத்த கணக்கையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் மிகத் துல்லியமாக இரண்டும் ஒன்றாகவே இருந்தது.
மொத்த வாக்குகள்:
இரண்டு ஒன்றியம், ஒரு பேரூராட்சி அடங்கிய விக்கிரவாண்டி தொகுதியில் 2லட்சத்து 23 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 1லட்சத்து 11 ஆயிரத்து 607 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பேர். மூன்றாம் பாலினத்தோர் வாக்குகள் 25.
இதில் சாதிரீதியான வாக்குகளைப் பார்ப்போம்.
�,”