fரயில் கொள்ளை: துப்புக் கொடுத்தது யார்?

Published On:

| By Balaji

சேலத்திலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு இரயிலில் எடுத்துச் சென்ற பழையப் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு துப்புக் கொடுத்தது யார் என்ற விசாரணையைத் துவங்கியுள்ளனர் சிபிசிஐடி போலீஸார்.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ந் தேதி இரவு மேட்டூரிலிருந்து சேலம் வந்த இரயில், பிளாட்பாரம் 1 ஏ பாதையில் நின்ற 17 பெட்டிகளை இணைத்துக்கொண்டு சென்னை நோக்கிப்புறப்பட்டது. இரவு 9.00 மணிக்கு அந்த இரயிலின் இஞ்சின் கடைசியாக வந்த பெட்டிகளில் ஒன்றில்தான் சேலம் ஸ்டேட்பேங்கிலிருந்து பழைய நோட்டுகள் மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் என 325 கோடி ரூபாயை வேகனில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இதை நோட்டமிட்ட வட மாநில இரயில் கொள்ளைக்கும்பல் சின்னசேலத்திலிருந்து விருத்தாசலம் வருவதற்குள் சுமார் 45 நிமிடங்களில்ரூ 5.78 கோடியைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

கொள்ளைக் கும்பலை கண்டுபிடிக்க 26 மாதங்களுக்குப் பிறகு சிபிசிஐடி சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் பல்லாயிரம் போன்கால்களை சல்லடைப் போட்டு சலித்தெடுத்தனர். பின்னர், அந்த கொள்ளைக் கும்பல் மத்தியபிரதேசம் குணா மாவட்டம் கேஜ்ராசக் கிராமத்தைச் சேர்ந்த மோஹர் சிங் கும்பல் என்பதைக் கண்டுபிடித்தார்கள்.குற்றவாளிகளை எப்படிக் கண்டுபிடித்தார்கள்? என்ன மாதிரியான விசாரணையை செய்தார்கள்?, கொள்ளைக் கும்பலுக்கு துப்புக்கொடுத்தது யார்? என்ற விசாரணையில் இறங்கியது நமது மின்னம்பலம் நிருபர்கள் குழு.

இரயில் கொள்ளை வழக்கு, இரயில்வே போலீஸிடமிருந்து சிபிசிஐடி-க்குமாற்றியதும் விசாரணை அதிகாரி சிவணாண்டி பாண்டியன் சேலம்கிருஷ்ணன் டி.எஸ்.பி, காஞ்சிபுரம் அண்ணாதுரை, சத்தியமூர்த்தி டிஎஸ்பி,லாவண்யா ஏடிஎஸ்பி, சாமுண்டீஸ்வரி எஸ்.பி, பிரவின்குமார் எஸ்.பி,ஏ.ஜி.பாபு டிஐஜி, செந்தில் ஏடிஎஸ்பி, ஏடிஜிபி அமேரேஷ்பூசாரி உட்பட ஒருபெரிய குழு இறங்கியது.முதலில் பணம் கொள்ளை போன ரயிலை முழுமையாக ஆராய்ந்தார்கள், பிறகு குழுக்களாக பிரிந்து விழுப்புரம் முதல் சேலம் வரையில் ரயில் பாதையிலும்

ரயில் பாதையின் இருபக்கமும் நடந்து சென்று ஆராய்ந்தார்கள். அதில் கிடைத்த தடயங்களில் சிக்கியதுதான் மோஹர் சிங் கும்பலாகும்.

மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காலியா (எ) கிருஷ்ணா(எ) காபு, பில்டியா உட்பட ஏழுபேரைப் பிடித்து அதில் ஐந்துபேரை அக்டோபர்30ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தார்கள். பின்னர், அவர்களுக்கு உதவுவதுபோல் இணக்கமாக பேசி மேல் அதிகாரிகளுக்குத்தெரியாமல் செல்போன் கொடுத்து மனைவி, மற்றும் உறவினர்களிடம் பேசவைத்து அதை பதிவு செய்தார்கள்.

ரயிலில் கொள்ளை அடித்ததை தமிழக போலீஸார் கண்டுபிடிச்சுட்டாங்க என்று அவர்கள் தானாகவே உறவினர்களிடம் பேசியதை அடிப்படையாகக் கொண்டு அவர்களை பிடித்து விட்டனர். இவ்வாறு அவர்கள் போலீசார் விரித்த வலையில் சிக்கி ஒவ்வொருவரும் கூறிய உண்மையை வாக்குமூலமாக கொண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் நாங்கள் பலமுறை ஒத்திகை பார்த்தோம். கடைசியாக 8ந் தேதி இரவு வந்த ரயிலில் திட்டமிட்டபடி ரயில் கூரையில் ஏறி கூர்மையான ராடை வைத்து ஓட்டைபோட்டு பணத்தை எடுத்து மூட்டைக் கட்டிவைத்திருந்தோம். விருத்தாசலத்திற்கு அருகில் இரயில்வே பாலத்தில் வேலை நடைபெறுவதால் இரயில் மெதுவாகச் செல்லும்போது எங்கள் ஆட்கள் அங்கே காத்திருந்தனர். அவர்களிடம் பணமூட்டைகளை தூக்கிபோட்டுவிட்டு இயல்பான முறையில் விருத்தாசலம் இரயில்வே நிலையத்தில் இறங்கினோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.

இந்த கொள்ளைக்காக சோதனை முன்னோட்டம் பார்த்தார்கள் என்றால் பல நாட்களுக்குமுன்பே கொள்ளைக் கும்பலுக்கு யாரோ துப்புக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் யார்? என்பதைக் கண்டுபிடிக்க வங்கி ஊழியர்கள், இரயில்வே ஊழியர்கள், இரயில் கேப்டன் ஆகியோரை சேலம் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். ரயில்வே ஊழியர்கள், வங்கி ஊழியர்களை ஏன் சந்தேகப்பட்டு கண்காணிக்கிறீர்கள் என்று போலீஸாரிடம் கேட்டோம்.

சாதரணமாக வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கிக்குச் சாலை வழியாகப் பழையநோட்டுகளை எடுத்துசெல்ல மாவட்ட எஸ்.பி, அல்லது மாநகராட்சி காவல்துறைஆணையரிடம் . பாதுகாப்பு கேட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு கடிதம் கொடுப்பார்கள். காவல்துறை அதிகாரிகள் எஸ்.ஐ, அல்லது இன்ஸ்பெக்டர் தலைமையில் எட்டு போலீஸாருக்கு குறையாமல் அனுப்புவார்கள். சேலம் ஸ்டேட் பேங் அதிகாரி பத்து நாட்களுக்கு முன்பு பணம் எடுத்துசெல்ல வேகன்(தனிபெட்டி) கேட்டு.இரயில்வே ஸ்டேஷன்அதிகாரிக்குக் கடிதம் கொடுத்துள்ளார் .ரயில்வே அதிகாரி மூன்று நாட்களுக்கு முன்பு வங்கி அதிகாரிக்குத் தகவல்கொடுத்துள்ளார். 8ந் தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் ரயிலில் இஞ்சின்பின்னால் உள்ள பெட்டி ஒதுக்கப்பட்டுள்ளதாக.தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரி, சேலம் காவல்துறைஅதிகாரியிடம் பாதுகாப்புக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளார், இந்த வழக்கில் பல்வேறு நபர்கள் மீது சந்தேகங்கள் உள்ளதால் விசாரணையும் தொடர் வண்டியைப் போலத் தொடர்கிறது என்றார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share