fமிசா ஓய்வூதியத்தை நிறுத்திய கமல்நாத்

public

மத்தியப் பிரதேசத்தில் நெருக்கடி நிலையின் போது மிசா மற்றும் டி.ஐ.ஆர். போன்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டோருக்கான ஓய்வூதிய நிதியை அம்மாநில முதல்வர் கமல்நாத் நிறுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்ற பிறகு, டிசம்பர் 17ஆம் தேதி கமல்நாத் (72) அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். முதல்வராகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முடியாத நிலையில், எமர்ஜென்சி காலத்தில் உள்நாட்டு பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (மிசா) மற்றும் இந்திய பாதுகாப்புச் சட்டம் (டி.ஐ.ஆர்.) போன்ற கடுமையான வழக்குகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட 2,500க்கும் அதிகமானோருக்கான ஓய்வூதிய நிதியை நிறுத்தியுள்ளார்.

நெருக்கடி காலத்தில் மத்தியப் பிரதேசத்தில் மிசா மற்றும் டி.ஐ.ஆர். போன்ற கடுமையான சட்டங்களில் சிறையில் அடைக்கப்பட்ட 2,604 பேருக்கு மாதம் ரூ.25,000 ஓய்வூதியம் வழங்கும் *லோக்தந்திரா செனானீஸ்* திட்டத்தை 2008ஆம் ஆண்டில் அம்மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் கொண்டுவந்தார். தற்போது திடீரென இந்த ஓய்வூதியத் திட்டம் நிறுத்தப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

1975ஆம் ஆண்டில் இந்தியாவில் நெருக்கடி நிலைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின்படி, அப்போதைய குடியரசுத் தலைவர் அக்ருதீன் அலி அகமது இந்தச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். இந்திரா காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிராக மக்கள் முடிவெடுக்காத நிலையை உருவாக்குவதற்காகவும், தேர்தலைத் தள்ளிப்போடும் நோக்கத்திலும் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 21 மாதக் காலம் இந்த நெருக்கடி நிலை நீடித்தது. அப்போது, இந்திரா காந்தியின் மகனான சஞ்சய் காந்தியின் நண்பராக இருந்தவர் கமல்நாத். எனவேதான் கமல்நாத் இந்த ஓய்வூதியத்தை நிறுத்தியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி தற்போது குற்றம்சாட்டியுள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்லப்போவதாகவும் பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளைச் சரிபார்த்து, புதிய செயல்முறையை உருவாக்கப் போவதாக அம்மாநில நிர்வாகம் கூறுகிறது.

டிசம்பர் 22ஆம் தேதி அம்மாநில பொது நிர்வாகத் துறை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஆணையாளர்களுக்கு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில், ‘லோக்தந்திரா செனானீஸ் திட்டத்துக்கு அளவுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டியது கட்டாயமாகும். இதற்கான புதிய வெளிப்படையான செயல்முறை வகுக்கப்பட்டு நிதி வழங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சலுஜா *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் பேசுகையில், “மிசா ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை. அதில் பல போலியான பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டறிந்து நீக்குவதே அரசின் முயற்சியாகும்” என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் ஓய்வூதியத்தை யாருக்கும் விநியோகம் செய்யாமல் நிறுத்தி வைக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதையும் பெயர் குறிப்பிட விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

.

** மேலும் படிக்க … **

**[ராமதாஸை சந்தித்த அமைச்சரின் அண்ணன்: அதிமுக – பாமக அணியின் அடுத்த கட்டம்!](https://minnambalam.com/k/2019/01/04/63)**

**[சி.வி.சண்முகத்தின் சந்தேகம்… ஓ.பன்னீருக்கான டார்கெட்!](https://minnambalam.com/k/2019/01/04/28)**

**[100 கோடி ஊழல்: அமைச்சருக்கு எதிராக உயர் நீதிமன்றம் உத்தரவு!](https://minnambalam.com/k/2019/01/04/60)**

**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் தனி டிராக் – போட்டிக்குத் தயங்கும் அதிமுக எம்.பி.க்கள்!](https://minnambalam.com/k/2019/01/03/91)**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *